1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 30 மே 2015 (04:03 IST)

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு மூடுவிழா

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் போதிய தண்ணீர்  இல்லாத காரணத்தினால், பறவைகள்வரத்து குறைந்து போனது. இதனால் சுற்றுலாப் பயணிகள்  வருகையும் சுருங்கிப்போனது. இவைகள் காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாயலம் மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
சென்னையில் சில மைல் தொலைவில் உள்ள, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மே 30 ஆம் தேதி முதல் மூடப்படுகிறது. 
 
சென்னையை அடுத்த காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இந்த பறவைகள் சரணலாயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டு பறவைகள் சாரைசாரையாக வரத்தொடங்கும்.
 
இந்த ஆண்டும் வழக்கம்போல் வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கியதை தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி சரணாலயம் திறக்கப்பட்டது.
 
ஆனால், ஏரியில் போதிய தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக வெளியட்டு பறவைகளின் வருகை வழக்கத்தைவிட குறைந்து போனது. கடந்த ஆண்டு 35 ஆயிரமாக இருந்த வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெறும் 5 ஆயிரமாக குறைந்து போனது. இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் குறைந்து போனது. 
 
இதனால், கலை இழந்து காணப்பட்ட, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை மே 30 ஆம் தேதி முதல்  மூடப்படுகிறது. இனி அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது தான், வெளிநாட்டு பறவைகளின் வருகையை பொறுத்து சரணாலயம் திறக்கப்படும் சூழ்நிலை நிலவுகின்றது.