காட்டி கொடுத்தவரின் கை, கால்களை உடைப்பேன்: ஐடி சோதனைக்கு பின் விசிக பொறுப்பாளர் மிரட்டல்

Last Modified வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (09:04 IST)
ஒருபக்கம் திமுக பொருளாளர் துரைமுருன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் இன்னொரு பக்கம் திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் காரில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்தது. அதுமட்டுமின்றி விடுதலைச்சிறுத்தை நிர்வாகிகள் ஒருசிலரின் வீட்டிலும் சோதனை நடந்தது
துரைமுருகன் மற்றும் விசிக பொருப்பாளர்கள் ஆகியோர்களின் இடங்களில் நடந்த சோதனைக்கு சொந்த கட்சியை சேர்ந்தவர்களே ஐடி அதிகாரிகளிடம் போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக விசிக பிரமுகரின் காரில் நூதன முறையில் பணம் கடத்தியதை சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர் கூறியிருந்தால் தவிர தேர்தல் அதிகாரிகளுக்கும் ஐடி அதிகாரிகளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை
இந்த நிலையில் ஐடி சோதனைக்கு உள்ளான விசிக பிரமுகர் ரமேஷ், சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'பணத்தை மறைத்து வைத்திருப்பது தனக்கும் ஓட்டுனருக்கும் மட்டுமே தெரியும் என்றும் இதனை தேர்தல் அதிகாரிகளிடம் காட்டிக் கொடுத்த நபர் யார் என விசாரித்து வருவதாகவும், சம்பந்தபட்ட நபர் கிடைத்ததும் அவரது கை கால்களை உடைப்பேன் என்றும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இதுபோன்ற சோதனைக்கெல்லாம் அஞ்சாது என்றும் கூறியுள்ளார். ஒரு கட்சியின் நிர்வாகி பகிரங்கமாக இவ்விதம் மிரட்டல் விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :