வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2016 (09:07 IST)

வர்தா புயல் எதிரொலி - இன்றும் கனமழை பெய்யும்

வர்தா புயல் நேற்று கரையைக் கடந்து விட்டாலும், இன்றும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


 

 
சென்னைக்கு கிழக்கே 140 கி.மீ. தூரத்தில் வங்க கடலில் மையம் கொண்டிருந்த வர்தா புயல் மணிக்கு நேற்று சென்னையை கடுமையாக தாக்கியது.
 
இதனால் சென்னையில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் அதிகபட்சமாக 192 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால், 1000க்கும் மேற்பட்ட மரங்கள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து சாலையில் விழுந்தன. சாலைகள் முழுவதும்  மரக்கிளைகள் மற்றும் குப்பைகளாக காட்சியளிக்கிறது. 
 
இந்நிலையில், புயல் கரையைக் கடந்தாலும், இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
 
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் கூறியதாவது:
 
“வர்தா புயல் நேற்று சென்னை துறைமுகம் அருகே கரையை கடந்த போது, 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. புயலில் மையப்பகுதி 2.45 மணி முதல் 5 மணி வரை கடந்தது. அதன் பின் அது மேற்கு நோக்கி திருவண்ணாமலை மாவட்டம் நோக்கி சென்றுவிட்டது. அப்போது 75 முதல் 85 கி.மீ வரை காற்றின் வேகம் இருந்தது.
 
புயல் கரையைக் கடந்து விட்டாலும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும்.  ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதன்பின் படிப்படியாக மழை குறையும்” என்று அவர் தெரிவித்தார்.