செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 11 ஜனவரி 2020 (15:53 IST)

ராமதாஸ் பெயருக்கு மாற்றப்பட்டது வன்னியர் சங்க அறக்கட்டளை ? - பாமகவில் சலசலப்பு !

வன்னியர் சங்க அறக்கட்டளை தற்போது டாக்டர் ராமதாஸின் பெயரில் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டாக்டர் ராமதாஸ் சிறு சிறு குழுக்களாக செயல்பட்டு வந்த வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து பாட்டாளி மக்கள் கட்சியின் கீழ் கொண்டுவந்தார். அதன்பின் வன்னிய இளைஞர்களின் கல்விக்காக வன்னியர் சங்க அறக்கட்டளை என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் சொத்து மதிப்பு இன்றைய நிலையில் பல ஆயிரம் கோடி கணக்கில் உள்ளது. இந்த அறக்கட்டளையின் கீழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சட்டக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் இப்போது வன்னியர் சங்க அறக்கட்டளை வகுப்புகளில் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது இந்த செய்தியை அடுத்து பாமகவில் சலசலப்பு எழுந்துள்ளது ஏற்கனவே என் குருவின் மகன் கனலரசன் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொல்லியும், குருவின் வழியாக இருந்த வைத்தியை பாமகவில் இருந்து முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கியது என்பது குறிப்பிடத்தகக்து.