Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக வேண்டும்-வைரமுத்து


Abimukatheesh| Last Updated: வியாழன், 5 ஜனவரி 2017 (16:17 IST)
மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அரசியல் தலவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வைரமுத்து தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க ஸ்டாலினின் தலைமை தேவை என்று வாழ்த்து செய்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

 
நேற்று நடந்த திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் திமுக செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
இன்று கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க ஸ்டாலினின் தலைமை தேவை என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார் என்பது தெரிகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :