வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (10:44 IST)

23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எம்பி? வைகோவுக்கு காத்திருக்கும் சவால்!

திமுக கூட்டணி ஒப்பந்தத்தின் படி மதிமுகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. ஆனால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி-யாக ஒரு முட்டுக்கட்டை விழுந்துள்ளது. 
 
மதிமுக தேர்தலுக்கு திமுகவுடன் கூட்டணி வைத்தது. மதிமுக கேட்ட தொகுதியை திமுக கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், மதிமுகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டது. 
 
அந்த வகையில் மதிமுகவிற்கு ஒரு சீட் திமுக சார்பில் ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால் குஷியான மதிமுக தொண்டர்கள் வைகோவின் குரல் ராஜ்யசபாவில் 23 ஆண்டுகளுக்கு பின்னர் ஒலிக்கும் என ஆசையாய் காத்திருந்தனர். 
ஆனால், வைகோ மீதான தேசதுரோக வழக்கின் தீர்ப்பு வரும் ஜூலை 5 ஆம் தேதி வழங்கப்பட இருகிறது. இந்த தீர்ப்பை பொறுத்தே வைகோவின் எம்பி பதவி குறித்து முடிவெடுக்கப்படும். தீர்ப்பு சாதகமாக வரும் பட்சத்தில் 5 ஆம் தேதிக்கு பின்னர் வைகோ வேட்புமனு தாக்கல் செய்வார். 
 
அப்படியில்லை என்றால் மதிமுகவின் சார்பில் வேறு யாராவது எம்பி ஆக்கப்படுவார்களா? அல்லது மதிமுக வேறு ஏதும் திட்டங்களை வைத்துள்ளதா? என்பது தெரியவில்லை. 
 
2009 ஆம் ஆண்டு குற்றம் சாட்டுகிறேன் என்கிற நூல் வெளியீட்டு விழாவில், இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசியதாக தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.