Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பொன்னார் மீது ஒரு செருப்புதான்; ஆனால் என் மீது 4, 5 செருப்பு வீசப்பட்டது: ஆங்க்ரீயான வைகோ!

பொன்னார் மீது ஒரு செருப்புதான்; ஆனால் என் மீது 4, 5 செருப்பு வீசப்பட்டது: ஆங்க்ரீயான வைகோ!

ஞாயிறு, 19 மார்ச் 2017 (17:37 IST)

Widgets Magazine

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய இணை அமைச்சர் தமிழகத்தை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன் மீது சேலத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொன்னார் மீது ஒரு செருப்பு தான் வீசப்பட்டது, ஆனால் என் மீது திமுகவினர் 4, 5 செருப்புகளை வீசினர் என்றார். தற்போதைய தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது? ரேசன் கடைகளில் பொருட்கள் தட்டுபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளதே? என செய்தியாளர்கள் வைகோவிடம் கருத்து கேட்டனர்.
 
இதற்கு பதில் அளித்த வைகோ கேள்விக்கான பதில் அளிக்காமல் சேலத்திற்கு முத்துகிருஷ்ணன் உடலிற்கு அஞ்சலி செலுத்த சென்ற பொன்னார் மீது செருப்பு வீசப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.
 
தொடர்ந்து பேசிய அவர், செயல் தலைவர் ஸ்டாலினும் இதை கண்டித்து நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். காவேரி மருத்துவமனையில் கலைஞரை பார்க்க சென்ற போது என் மீது செருப்பு வீசப்பட்டது. பொன்னார் மீது ஒரு செருப்பு தான் வீசப்பட்டது. ஆனால் என் மீது 5, 6 செருப்புகள் வீசப்பட்டது.
 
திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் தூண்டுதலால்தான் என் மீது திட்டமிட்டு செருப்பு வீசப்பட்டது. செருப்பை வீச வைத்து விட்டு 5 நிமிடத்தில் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு கபட நாடகம் நடத்தினர் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றேன். பொன்னார் மீது செருப்பு வீசியதற்கு கண்டணம் தெரிவிக்கும் தலைவர்கள் யாரும் அன்று எனக்கு நடந்தபோது கண்டிக்கவில்லை என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கணவருடன் சண்டை, பல ஆண்களுடன் உறவு: வாழ்க்கையை இழந்த இளம்பெண்!

கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ளோ ஆரல்வாய்மொழியில் திருமணமாகி கணவருடன் ...

news

அறைக்குள் முடித்த அமைச்சர் விஜயபாஸ்கர்: மக்கள் எதிர்ப்பால் தலைகீழாக மாறிய நிலைமை!

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தீபா அணி என மூன்றாக பிரிந்து ...

news

நான் ஒரு டைப்பான ஆளு: எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விட்ட எம்எல்ஏ! (வீடியோ இணைப்பு)

கோவை சூலூர் தாலுகாவில் பெரியகுயிலியில் நடந்த கல் குவாரி வெடி விபத்தில் இரண்டு பேர் ...

news

எனக்கு எதிராக எனது கணவரை சசிகலா தூண்டிவிடுகிறார்! - தீபா பரபரப்பு குற்றச்சாட்டு

என்னுடைய கணவர் மாதவனை தூண்டிவிட்டு தவறாக வழிநடத்தி தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளார்கள் ...

Widgets Magazine Widgets Magazine