வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 29 நவம்பர் 2015 (08:45 IST)

வைகை ஆற்றின் கரையோற மக்களுக்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை ஆற்றின் கரையோற மக்களுக்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பான இடங்க்ளுக்குச் செல்லுமாறு கரையோர மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்னர்.


 

 
வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியை கடந்து 69 ஆவது அடியை நெருங்கிவருகின்றது. இதனால் வைகை ஆற்றில் நீர் திறந்துவிடப்பட்டது.
 
எனவே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அதனால், ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 
இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் உபரி நீர் முழுமையாக திறந்துவிடப்படும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
வைகை அணையின் முழுகொள்ளவு 71 அடியாக இருந்தபோதும், அணையின் பாதுகாப்பு கருதி 69 அடி தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.