வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2015 (12:30 IST)

நிவாரணப் பணியை பார்வையிடாமல் நான் ஜிம்மில் இருப்பேன் : அதிர்ச்சி தரும் சென்னை முன்னாள் மாநகராட்சி ஆணையர்

துப்புரவு தொழிலாளிகள்  மழை நீரை அகற்ற அனுப்பிவிட்டு  போது நான் ஜிம்மில் இருப்பேன் என்று முன்னாள் சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மத்திர அரசின் ரசாயனங்கள் மற்றும் உரத்துறையின் செயலாளராக இருப்பவர் சுர்ஜீத் குமார் சவுத்ரி. இவர் கூறும் போது “நான் பள்ளியில் படிக்கும் காலங்களில், உண்மையில் எனக்கு கெமிஸ்ட்ரி பாடத்தில் அவ்வளவு ஈடுபாடெல்லாம் இல்லை.
 
உண்மையை சொல்லப் போனால், அந்த பாடத்தில் நான் அடிக்கடி ஃபெயில் ஆகி விடுவேன். கெமிஸ்ட்ரியில் ஃபெயில் ஆன நான், அந்த துறையிலேயே பணியாற்றுகிறேன் என்று எனது மகனே அடிக்கடி என்னை கிண்டல் செய்வான்” என்று கூறினார்.  
 
அதுகூட பரவாயில்லை. அவர் அடுத்த கூறியதுதான் அதிர்ச்சியாய் இருந்தது.
 
முன்னாள் சென்னை மாநகராட்சி ஆணையராக சென்னையில் பணிபுரிந்த போது தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சுர்ஜித்: 
 
“சென்னையில் மழை பெய்யும் போது பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இரண்டு நாட்களில் வெள்ளம் அதுவாகவே வடிந்து விடும். 
 
நான் ஆணையராக இருந்த போது, மழை காலங்களில், சாலையில் தேங்கியுள்ள நீரை அகற்றவும், பாதாள சாக்கடைகளை சரிசெய்யவும் துப்புரவு பணியார்களை அனுப்பி விடுவேன்.
 
அவர்கள் சாலையில் நிற்பதை பார்க்கும் பொதுமக்கள், சென்னை மாநகராட்சி பொறுப்பாக வேலை செய்கிறார்கள் என்று நினைப்பார்கள். ஆனால் நான் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் உள்ள ஒரு ஜிம்மில் வேலை செய்து கொண்டிருப்பேன்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
 
அடப்பாவிங்களா!....விளங்குமா இது?