இத்தனை காலம் ஜெயலலிதாவிற்காக, இனி..... சசிகலா அதிரடி


Abimukatheesh| Last Updated: புதன், 8 பிப்ரவரி 2017 (19:47 IST)
இத்தனை காலம் ஜெயலலிதாவிற்காக வாழ்ந்தேன், இனி அவரது கனவுகளுக்காக வாழ்வேன் என்று எ,.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா கூறினார்.

 


நேற்று இரவு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக திரும்பியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறியதாவது:-

கட்சியின் ஆசை வார்த்தைகளை நம்பி ஓ.பன்னீர்செல்வம் பொய் கூறி வருகிறார். துரோகங்கள் ஒரு போதும் வென்றது கிடையாது. அதுவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை என்றும் வெல்லவே முடியாது. இத்தனை காலம் ஜெயலலிதாவிற்காக வாழ்ந்தேன். இனி, அவரது கனவுகளுக்காக வாழ்வேன்.

கட்டாயப்படுத்தினார்கள் என்கிறார், என்னை சட்டமன்ற குழு தலைவராக முன்மொழிந்தவர், என் அருகில் அமர்ந்து உரையாடிக் கொண்டுதான் இருந்தார். 48 மணி நேரம் கழித்து ஒரு பொய்யை சொல்கிறார். இந்த இடைப்பட்ட நேரத்தில் யாரை சந்தித்தார்? யாருடன் ஆலோச்சித்தார்? என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :