1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 6 ஜூலை 2015 (16:46 IST)

சென்னையில் நேருக்கு நேராக வந்த இரண்டு ரயில்கள்; ஓட்டுநரின் சாமார்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு

சென்னையில் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேராக இரண்டு ரயில்கள் வந்தது. ஓட்டுநரின் சாமார்த்தியமாக நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
 
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறநகர் மின்சார ரயில் ஒன்று காலை 10.30 மணிக்கு தாம்பரத்திற்கு புறப்பட்டு வந்துள்ளது. இந்த ரயில் கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
 
இதற்கிடையே, அதே தண்டவாளத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி புறநகர் ரயில் ஒன்று வந்தது. இந்த ரயில், செண்ட்ரலை அடுத்த பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து கோட்டை ரயில் நிலையம் நோக்கி சென்றுள்ளது.
 
இரண்டு மின்சார ரயில்களும் கோட்டை ரயில் நிலையத்திற்கும், பூங்கா ரயில் நிலையத்திற்கும் நடுவே நேருக்கு நேராக தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்துள்ளது. எதிர்பாராமல் நடந்த இதனை கவனித்த ஓட்டுநர்கள் உடனடியாக ரயில்களை நிறுத்தியுள்ளனர்.
 
ஓட்டுநரின் சாமார்த்தியத்தால் உடனடியாக ரயில்கள் நிறுத்தப்பட்டதை அடுத்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து புறநகர் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.