ரேஷன் கடைகளில் முறைகேடு: வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்தால் நடவடிக்கை - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

K.N.Vadivel| Last Updated: செவ்வாய், 23 ஜூன் 2015 (22:43 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில், ரேசன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால், அது குறித்து வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்தால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்டஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்தால் ரேஷன் பொருட்களைக் கடத்தினாலோ படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் 94450 00370 என்ற செல் போன் எண்ணிற்குப் பொது மக்கள் அனுப்பி வைக்கலாம்.
மேலும், ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படாமல் இருந்தாலோ, ரேஷன் விநியோகிஸ்தர்கள், பொது விநியோக பொருட்கள் தீர்ந்துவிட்டதாக மக்களிடம் தவறான கருத்தைக் கூறி, ஏமாற்றினாலோ உடனே அதைப் புகைப்படம் எடுத்து மாவட்ட சப்ளை அதிகாரியின் செல் எண் 94450 00370 க்கு வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். அந்தப் புகார் மீது உடனே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதே போல, தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் செயல்பட்டால் ரேசன் கடை முறைகேடுகள் குறையும்.


இதில் மேலும் படிக்கவும் :