1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (10:18 IST)

அதிமுக வோடு சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது – கூட்டணிக் கட்சிகளுக்கு டி.டி.வி எச்சரிக்கை !

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க இருக்கும் கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று அமமுக துணைப் பொதுச்ச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழத்தில் திமுக-விசிக-மதிமுக-முஸ்லிம் லீக்-இடதுசாரிகள் ஆகியோர் அடங்கியப் பலமான கூட்டணி உருவாகியுள்ளது. அதேப்போல அதிமுக அணியில் பாமக, பாஜக மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகள் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிமுக விலிருந்து பிரிந்து சென்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்றக் கட்சியை ஆரம்பித்துள்ள சசிகலா மற்றும் டிடிவி தரப்பினர் எந்தக் கட்சியோடுக் கூட்டணி எனத் தெரியாமல் அல்லாடி வருகின்றனர். போலவே எந்தக் கட்சிகளும் அவர்களோடுக் கூட்டணி அமைக்கவும் விருப்பம் காட்டவில்லை. அதனால் இதுவரையில் அமமுக தனித்தேப் போட்டியிடும் சூழலேத் தமிழக அரசியலில் நிலவி வருகிறது. நிலவி வருகிறது. ஆனால் பாஜக தலைமை எப்படியாவது அமமுக மற்றும் அதிமுகவை ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து வருகிறது.

ஆனால் பாஜக வின் இந்த முடிவிற்கு இருதரப்புமே இறங்கி வர மறுக்கிறது. அவ்வப்போது இருக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பத்திரிக்கையாளர்கள் முன் மற்றவரைத் தாக்கிப் பேசி வருகின்றனர். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவோடுக் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகப் பேசியுள்ளார். மேலும் ‘விரைவில் நாடாளுமன்ற தேர்தலும், 20 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் வரவுள்ளது. இத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறாவிட்டால் எடப்பாடியின் ஆட்சி தானாகவே முடிவுக்கு வந்துவிடும். அதற்குப் பயந்துதான் அவர்கள் கூட்டணி அமைத்து ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடி வருகின்றனர். அவர்களோடுக் கூட்டணி அமைக்கப் போகும் அனைவரும் ஜீரோவாகப் போகின்றனர். கூட்டணியில் இணையப் போகும் அத்தனைக் கட்சிகளும் தேர்தலில் டெபாசிட்டை இழக்கப் போகின்றனர்’ எனக் கூறியுள்ளார்.