1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (10:11 IST)

டிடிவி தினகரன் அடுத்த முதல்வர்?: தமிழகத்தில் மீண்டும் ஒரு புதிய முதல்வரா!

டிடிவி தினகரன் அடுத்த முதல்வர்?: தமிழகத்தில் மீண்டும் ஒரு புதிய முதல்வரா!

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று தான் பதவியேற்றார். அவர் நாளை சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் அதற்குள் அடுத்த முதல்வராக டிடிவி தினகரன் வர இருக்கிறார் என அதிமுக வட்டாரம் பரபரப்பாக பேசுகிறது.


 
 
தற்போது முதல்வராக பதவியேற்று இருக்கிற எடப்பாடி பனிச்சாமிக்கு உள்துறை, நிதி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட மூன்று பெரிய துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் டிடிவி தினகரன் முதல்வராக வந்ததும் அந்த துறைகளை இவருக்கு ஒதுக்குவதற்கு தான் என கூறப்படுகிறது.
 
பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே முதல்வர் பதவியை பிடிக்க போட்டி நிலவியது. ஆனால் எதிர்பாராதவிதமாக சசிகலா சிறைக்கு செல்ல வேறு வழியில்லாமல் மாற்று ஏற்பாடாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
 
ஆனால் சிறைக்கு சென்ற அன்று தான் அவரது அக்கா மகன் டிடிவி தினகரனை கட்சியில் சேர்த்தும், அதிமுக துணை பொதுச்செயலாளர் பதிவையையும் கொடுத்துவிட்டு சென்றார் சசிகலா. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை ஓரம்கட்டிவிட்டு டிடிவி தினகரனை முதல்வராக்க இருப்பதாக அதிமுகவில் பேசப்படுகிறது.
 
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றது, ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும் வரும் மே மாதம் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அல்லது அதற்கு முன்னதாகவே தினகரன் முதல்வர் பதவியை ஏற்பார் எனவும் கூறப்படுகிறது.