Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எடப்பாடி பழனிசாமியின் அழைப்பிற்காக காத்திருக்கும் தினகரன்...?


Murugan| Last Updated: வெள்ளி, 16 ஜூன் 2017 (11:51 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விரைவில் சந்திப்பார் எனத் தெரிகிறது.

 

 
ஓ.பி.எஸ் அணி தங்களோடு  இணைய வேண்டும் என்பதற்காக, அதிமுக கட்சி விவகாரங்களில் இருந்து சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் அறிவித்த சூழலில், இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் டில்லி புழல் சிறையில் அடைக்கப்பட்டார் தினகரன்.  
 
அதன் பின் ஜாமீனில் வெளியே வந்த அவர், இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் நான் கட்சி பணிகளில் இருந்து விலகியிருந்தேன். ஆனால் இப்போதுவரை அது நடக்கவில்லை. எனவே, நான் கட்சி பணியில் மீண்டும் ஈடுபடுவேன் என கூறினார். அதைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் 32 பேர் அவரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
 
ஆனால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லாமல், தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அமைச்சர்களின் எதிர்ப்பு காரணமாகவே அவர் அங்கு செல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முதல்வர் எடப்பாடியின் அழைப்பிற்காக அவர் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :