1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2017 (18:22 IST)

டிடிவி தினகரன் ஆதரவு எம்பி-க்கள் முதல்வருக்கு ஆதரவு? இரட்டை இலையால் புது திருப்பம்!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. 
 
இதுகுறித்து அனைத்து அணிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் தேர்தல் ஆணையம் விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே ஒதுக்கப்படுவதாக அறிவித்தது.
 
இந்நிலையில், ஆர்கே.நகர் தேர்தலில் தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டிடுவார் என கூறப்படுகிறது. தினகரனும் எனது ஆதரவாளர்கள் எப்பொழுதும் என்னுடன் துணையிருப்பர் என கூறி வருகிறார்.
 
இவ்வாறு இருக்கையில், தினகரன் ஆதரவு எம்பி-க்கள் மூன்று பேர் எடப்பாடி பழனிசாமி நடத்தில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், ஜெயலலிதா முதலாம ஆண்டு நினைவு ஊர்வலம் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்பி-க்களான நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று எடப்பாடி பழனிசாமியுடன் பேசினர்.
 
இது குறித்து தமிழ்மகன் உசேன் கூறுகையில், எம்.பிக்களின் இந்த திடீர் வருகை தினகரன் தரப்பினருக்கு அதிர்ச்சியையும் பழனிசாமிக்கு பலம் சேர்ப்பதாகவும் கூறினார். அதேபோல் மைத்ரேயன் மற்றும் கே.பி.முனுசாமி இந்த நிகழ்வுக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.