வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 13 ஜூன் 2017 (15:46 IST)

கைவிட்ட பாஜக ; கலக்கத்தில் தினகரன் : நடப்பது என்ன?

ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் ஆதரவை பெற நம்மிடம்தான் பாஜக வரவேண்டும் என நம்பியிருந்த தினகரனுக்கு பாஜக தரப்பு அதிர்ச்சி கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட தினகரன், சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதன் பின் அவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் 35 பேர் சந்தித்து பேசினர். அதில் 32 பேர் தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
 
ஏற்கனவே இரண்டு அணிகளாக உலா வரும் அதிமுகவில், தினகரன் புதிதாக மற்றொரு அணியை உருவாக்க முயன்ற விவகாரம் மத்திய அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும், இதுகுறித்து அவரை மத்திய அரசு எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இதையடுத்து, தொடர்ந்து தனக்கு நெருக்கடி கொடுத்து வரும் மத்திய அரசை சரிகட்ட முடிவெடுத்த தினகரன், மத்திய அரசுக்கும், மன்னார்குடி வட்டாரத்திற்கும் இடையே நெருக்கமாகவும், பாலமாகவும் உள்ள கேரள அரசியலில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரை சந்திக்க அவர் சமீபத்தில் கேரளா சென்றதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவரின் அனைத்து முயற்சியிலும் அவருக்கு தோல்வியே பரிசாக கிடைத்துள்ளது. 


 

 
தன்னிடம் ஏறக்குறைய 35 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். விரைவில் நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தல், தங்கள் கட்சியின் சார்பில் முன்னிறுத்தப்படும் நபருக்கு அதிமுகவின் ஆதரவை பெற தன்னிடம் பாஜக கையேந்தும் என எதிர்பார்த்திருந்தார் தினகரன். ஆனால், அவருக்கு ஆதரவாக இருந்த  32 எம்.எல்.ஏக்களில் பலர் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றுவிட்டதாக தெரிகிறது. தற்போது தினகரன் பக்கம் வெறும் 5 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி எப்படியும் பாஜகவின் கட்டளைக்கு உட்படுவார். எனவே, குடியரசு தலைவர் தேர்தலில் எந்த பிரச்சனையும் இல்லை என பாஜக கருதிகிறதாம். 
 
இன்னும் சொல்லப்போனால், அதிமுகவின் தயவே இல்லாமல் குடியரசு தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என பாஜக கணக்கு போடுவதாக தெரிகிறது. தமிழக அரசு தரப்பு, குடும்ப உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மத்திய அரசு என அனைத்து தரப்பிலிருந்தும் தனக்கு எதிராக திரும்பிவிட்டதால் தினகரன் மிகவும் கலக்கமடைந்துள்ளாராம். 
 
எனவே, அதிமுகவில் தன்னை வலுப்படுத்த என்ன செய்வதென்று தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.