Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டிடிவி தினகரன் அடக்கமானவர். சர்டிபிகேட் கொடுக்கும் பெண் எம்.எல்.ஏ

Sivalingam| Last Modified புதன், 15 பிப்ரவரி 2017 (19:37 IST)
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவை சசிகலா கைப்பற்றி பொதுச்செயலாளர் பதவி ஏற்றதோடு, முதலமைச்சர் ஆகவும் முயற்சி செய்தார். ஆனால் விதியின் தீர்ப்பால் சசிகலா சிறை சென்றுவிட்டார். இருப்பினும் சிறைக்கு செல்லும் முன் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டிடிடி தினகரனை அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் அமர்த்தியுள்ளார்.


டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் பதவி விலகியுள்ள நிலையில் அவருக்கு ஆதரவு கொடுப்பவர்களும் கட்சியில் இருக்கத்தான் செய்கின்றனர்.

டிடிவி தினகரன் குறித்து ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சரோஜா கூறியதாவது: துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தினகரன் அமைதியானவர், அடக்கமானவர்  என்றும் அவர்  கட்சிக்கு புதிதானவர் அல்ல என்றும் அவருக்கு திடீரென பொறுப்பு கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். இதற்கு முன்பே மாநில பேரவை செயலாளராகவும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தினகரன் இருந்துள்ளார் என்பதையும் சரோஜா எம்.எல்.ஏ சுட்டிக் காட்டினார்.


இதில் மேலும் படிக்கவும் :