வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (06:03 IST)

போக்குவரத்து வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

போக்குவரத்து வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

 
தமிழகம் முழுவதும் நாள்தோறும் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் உயிர்பலி மற்றும் பொருட்சேதம் அதிகமாக  நடைபெறுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாகனங்களை கவனக்குறைவும்,  அதிவேகமாகவும்  இயக்குவதுதான்.
 
மேலும், கடந்த காலங்களில், பள்ளி வாகனங்கள் பெரும் விபத்தில் சிக்கி மாணவர்கள் பலியானார்கள். இதனால், ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேகக் கட்டுப்பாடு கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது.
 
இந்த நிலையில், 2015ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியும், அதற்கு பின்பும்  தயாரிக்கப்படும் பேருந்துகள், ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களில், 80 கி.மீட்டர் வேகத்துக்கு மேல் இயக்கமுடியாத அளவு  வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட வேண்டும்.
 
மேலும், பள்ளி வாகனங்கள் மற்றும் குப்பை வாகனம் மற்றும் கழிவு பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் மற்றும் லாரிகள் ஆகியவற்றில் 60 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் இயங்கமுடியாத அளவு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.