வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 15 அக்டோபர் 2016 (18:12 IST)

பாலியல் தொழில் செய்ய வலியுறுத்தல்: அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

கரூரில் திருநங்கைகள் தங்களை பாலியல் தொழிலில் ஈடுபட செய்யும் திருநங்கைகளிடம் இருந்து காப்பாற்ற கோரியும், பாதுகாப்பு அளிக்க கோரியும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  


 

 
கரூர் மாவடியான் கோயில் தெருவில் வசிக்கும், ஐந்து திருநங்கைகளை மணவாசியை சேர்ந்த திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும், ஈடுபட்டு வருவதாக கரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. 
 
தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, எந்த பயனும் இல்லாத நிலையில் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 
 
அதுவும் வேலைக்கு ஆகாத நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைசச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
 
தமிழக முதல்வர் மூன்றாம் பாலினமாக எங்களை அறிவித்ததோடு, எங்கள் இனத்திற்கு எஸ்.ஐ வேலைகள் உள்ளிட்ட வேலைகளை செய்து பல நல்ல சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தியவர் என்றும், அவரது அமைச்சர் எங்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்று குறையாக எடுத்து கூறினர். 
 
சுமார் 1 மணி நேரமாக நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டதையடுத்து வந்த கரூர் நகர காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து  திருநங்கைகள் கலைந்து சென்றனர்.