Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வண்டலூர் பூங்காவை சுற்றிப்பார்க்க குட்டி ரயில்: ரூ.3 கோடி ஒதுக்கிய முதல்வர்

வியாழன், 12 அக்டோபர் 2017 (16:30 IST)

Widgets Magazine

சென்னையின் சுற்றுலா பகுதிகளில் முக்கியமான ஒன்று வண்டலூர் உயிரியல் பூங்கா. கடந்த 1985ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பூங்கா 1490 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏராளமான வன விலங்குகள், பறவைகள் ஆகியவை இருக்கும் இந்த பூங்காவை முழுவதுமாக சுற்றிப்பார்ப்பது என்பது மிகவும் கடினம். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து சுற்றிப்பார்க்க சிரமப்பட்டு வந்தனர்.


 


எனவே வண்டலூர் பூங்காவை சுற்றிப்பார்க்க தொடர்வண்டி என்ற குட்டி ரயில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக சுற்றுலா பயணிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது நிறைவேற்றி வைக்க ஒப்புக்கொண்டுள்ளார்

இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ரூபாய் 3 கோடி செலவில் 40 இருக்கைகள்கொண்ட நான்கு சிறிய தொடர்வண்டிகள் வாங்க ஒப்புதல் வழங்கினார். இதற்கான பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் விரைவில் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவை ரயிலிலேயே சுற்றிப்பார்க்கலாம் என்றும்ன் அவர் தெரிவித்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

70 சதவீத லாரி ஓட்டுனர்களுக்கு கண் பார்வை குறைவு - அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரி ஓட்டுனர்களில் பெரும்பாலானோருக்கு கண் ...

news

போரை சந்திக்க அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும்; எச்சரித்த வடகொரியா

கொரிய தீபகற்ப பகுதியில் போர் விமானங்களை பறக்க விட்ட அமெரிக்காவை வடகொரியா கடுமையாக ...

news

கண்ட இடங்களில் கை வைத்தார்; நடிகைகள் புகார் ; நடிகருக்கு சிக்கல்

ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக் மீது ஹாலிவுட் நடிகைகள் பலரும் புகார் கூறி வருவது ...

news

ஆருஷி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பெற்றோர் விடுதலை

கடந்த 2008ஆம் ஆண்டு டெல்லி அருகே உள்ள பல்டாக்டர்கள் தம்பதியர்களின் மகள் 14 வயது சிறுமி ...

Widgets Magazine Widgets Magazine