வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 25 நவம்பர் 2014 (12:14 IST)

பாய்ந்து வந்த ரயிலிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தண்டவாள நடுவில் படுத்து உயிர் தப்பிய தொழிலாளி

தொழிலாளி ஒருவர் வேகமாகப் பாய்ந்த வந்த ரயிலிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பினார்.
 
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே ஆழியூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவர், நேற்று காலை வேலைக்குச் சென்றுள்ளார். ஆழியூரில் இருந்து திருபுவனைக்கு ரயில் தண்டவாளம் வழியாக செல்லும்போது, ரயில் தண்டவாளத்தைக் கடந்துள்ளார். அப்போது பள்ளிநேழியனூர் என்ற இடத்தில் மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் அவருக்குப் பின்னால் திடீரென்று வந்துள்ளது. ரயில் சத்தம் கேட்டு நிலைகுலைந்த நடராஜன், ரயில் அருகில் வந்துவிட்டதால் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்துள்ளார்.
 
உடனே தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தண்டவாளத்தின் நடுப்பகுதியில் படுத்துள்ளார். வந்த வேகத்தில் ரயில் அவரை கடந்து சென்று விட்டது. இதில் அவரது தலை, கை, கால்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த நடராஜன் மயங்கிய நிலையில் தண்டவாளத்தில் கிடந்துள்ளார்.
 
பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற ஒருவர், ஊர் பொதுமக்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்துப் பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த நடராஜனை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.