வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2015 (12:18 IST)

குற்றாலத்தில் குளிக்கும்போது தலையில் பாறாங்கல் விழுந்து சுற்றுலா பயணி காயம்

சுற்றுலா பயணி ஒருவர் குற்றாலம் அருவியில் குளிக்கும்போது தலையில் பாறாங்கல் விழுந்ததில் அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது.
 

 
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே அமைந்துள்ள குற்றலாம் அருவியானது ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் தென் மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் துவங்கும். இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டும்.
 
குற்றால சீசன் ஜூன் துவங்கி ஆகஸ்ட் வரை தொடர்ந்து இருக்கும். இதனால் குற்றால அருவியை நோக்கி தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருவார்கள். நேற்றும் இதமான சூழல் சூழல் நிலவியது. இதனால், சுற்றுலா பயணிகள் அனைவரும் முக்கிய அருவியில் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.
 
இந்நிலையில், இந்த அருவியில் மதுரையை சேர்ந்த சுற்றுலா பயணி பாலகிருஷ்ணன் (45) என்பவரும் குளித்து கொண்டிருந்தார். அப்போது, மலையிலிருந்து பெரிய பாறாங்கல் உருண்டு வந்து உடைந்ததில் 3 துண்டாக உடைந்து பாலகிருஷ்ணன் தலையில் விழுந்தது.
 
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. உடனே அவரை அருகில் நின்ற பொதுமக்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.