Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாளை பிளஸ் 2 ரிசல்ட்: வீடு தேடி வருகிறது ரிசல்ட் எஸ்.எம்.எஸ்


sivalingam| Last Modified வியாழன், 11 மே 2017 (06:20 IST)
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் கல்வித்துறையும் அந்த விஞ்ஞானத்தை பயன்படுத்தி பல புதுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை தேர்வு முடிவு வெளிவர உள்ளதை அடுத்து இதுவரை இல்லாத அளவில் புதுமையாக, தேர்வு எழுதிய மாணவர் அல்லது அவரது பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு முடிவை தனித்தனியாக ஒவ்வொரு மாணவருக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வு முடிவை பார்க்க மாணவர்கள் இனி வெளியில் தேடி அலையவேண்டிய அவசியம் இல்லை.


 


மேலும் நாளை வெளிவரவுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவில் தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் தேர்வின்போது வழங்கிய மொபைல் போன் எண்ணுக்கும், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். அதுமட்டுமின்றி தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in/, www.dge1.tn.nic.in/, www.dge2.tn.nic.in/ ஆகிய இணையதளங்களிலும், காலை, 10:00 மணிக்கு பின், பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவரின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்தால்,மதிப்பெண் தெரியும்.பிளஸ் 2 தேர்வு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில், 15ம் தேதி முதல், மாணவர்களும், தனித்தேர்வரும் பதிவிறக்கம் செய்யலாம். வரும், 17 முதல், தாங்கள் படித்த பள்ளியில், தேர்வு எழுதிய மையத்தில், தற்காலிக சான்றி தழை பதிவிறக்கம் செய்யலாம்.


இதில் மேலும் படிக்கவும் :