Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு: முதல்முறையாக இணையதளத்தில் மட்டும் வெளியீடு

கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளது. முதல்முறையாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மட்டுமே வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை சரியாக 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், மாணவர்கள் படித்த பள்ளிகள் ஆகிய இடங்களிலும் தேர்வு முடிவுகளை அறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் அல்லது இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தங்களது பள்ளிகளில் வழங்கிய மொபைல் எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது வழங்கிய மொபைல் எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் என அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :