வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (19:06 IST)

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்: தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி

தமிழகத்தில் வரும் மே மாதம் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி தேர்தல் அணையத்தின் அறிவுறுத்தலின் படி நடைபெற்று வந்தது. இந்த பணி இன்றுடன் முடிவடைகிறது.


 
 
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில்  திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள் என்று தெரிவித்தார். பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்ய, ஆன்லைனில் இன்று இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றார். 
 
இதுவரை 6 லட்சத்து 55 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட தலைமை தேர்தல் அதிகாரி, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
 
தேர்தல் பணியில் ஈடுபடும் 3 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி வருகிற 24 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.