Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உதயமாகிறது தமிழ்நாடு இளைஞர்கள் கட்சி: மாலையில் செய்தியாளர்கள் சந்திப்பு!

உதயமாகிறது தமிழ்நாடு இளைஞர்கள் கட்சி: மாலையில் செய்தியாளர்கள் சந்திப்பு!


Caston| Last Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:46 IST)
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தமிழ்நாடு இளைஞர்கள் கட்சி குறித்த அறிவிப்பு அதிகமாக காணப்பட்டது. உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் தேர்வு என ஆன்லைனில் கட்சியை நடத்தி வந்தனர்.

 
 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வீதியில் இறங்கிய இளைஞர்கள் அரசியலில் மாற்றம் கொண்டு வர தற்போது அரசியலில் இறங்கியுள்ளனர். தற்போது உள்ள அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கையை இழந்த இவர்கள் எங்கள் தேவையை நாங்களே நிறைவேற்றிக்கொள்கிறோம் என களத்தில் இறங்க ஆரம்பித்துள்ளனர்.
 
இந்நிலையில் தான் இளைஞர்களின் இந்த அரசியல் பிரவேசம் ஆரம்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஒன்றுகூடி ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ என்ற அமைப்பை உருவாக்க உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் நியமன விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
 
இதனை தொடர்ந்து மூன்று நாட்களில் கட்சி சார்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும் என கூறியிருந்தனர். இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இந்த முதல் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :