வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 25 ஆகஸ்ட் 2018 (08:41 IST)

தமிழக அரசு ஊழியர்கள் கேரளாவிற்கு எவ்வளவு தொகை வழங்குகிறார்கள் தெரியுமா?

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர். 350க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இந்தியா முழுவதும் கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் அத்தியாவசப் பொருட்களான அரிசி, பருப்புவகைகள், காய்கறிகள், பிரட் பாக்கெட்டுக்கள், நாப்கின், துணிமணிகள், உள்ளாடைகள், பெட்ஷிட்கள் என அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன.  மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே தமிழக அரசு கேரள வெள்ள நிவாரண நிதியாக 10 கோடி ரூபாய் வழங்கியுள்ள நிலையில், தமிழக அரசு  ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் என அனைத்து துறைகளிலும் பணிபுரியும் 14 லட்சம் பேர் கேரள நிவாரண நிதிக்காக ஒரு நாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்திருந்தனர்.
 
அதன்படி அவர்கள் சுமார் 120 கோடி ரூபாயை நிவாரண நிதியாக தமிழக அரசிடம் வழங்குகிறார்கள். அந்த தொகையானது கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.