1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 30 ஏப்ரல் 2016 (01:42 IST)

ஜெயேந்திரருக்கு எதிராக அப்பில் செய்ய அரசு முடிவு

ஜெயேந்திரருக்கு எதிராக அப்பில் செய்ய அரசு முடிவு

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்த வழக்கில் அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 

 
சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002 ஆம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் புகாரின் பேரில் ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைதும்  செய்தனர்.
 
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று  வந்தது. இந்த வழக்கில் 14 வருடங்களுக்குப் பிறகு, அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.  ஆனால், அப்ரூவர் ஆக மாறிய ரவிசுப்பிரமணியன் மீதான வழக்கை தொடர்ந்து நடத்த நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில், ஜெயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.