சபாநாயகர், தலைமைச் செயலாளருக்கு தமிழக கவர்னர் அதிரடி உத்தரவு!


sivalingam| Last Updated: செவ்வாய், 20 ஜூன் 2017 (10:21 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் பேரம் பேசப்பட்டது குறித்த வீடியோ ஒன்றை டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதேபோல பேரவைக் கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க குரல் எழுப்பி வருகிறது.


 


இந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்களை சந்தித்த ஸ்டாலின்   'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ ஆதாரத்தையும் அவரிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக பொறுப்பு கவர்னர், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு  சபாநாயகர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :