Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்!

ஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்!


Caston| Last Updated: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (13:44 IST)
தமிழக கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஆனால் பெண் நிருபர் ஒருவர் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட போது அதற்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடி தப்பித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

 
 
நேற்று தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். இதில் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றார்.
 
இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் செங்கோட்டையனிடம் பெண் நிருபர் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், அந்த பெண் நிருபர் அமைச்சர் செங்கோட்டையனிடம் ஆங்கிலத்தில் பல கேள்விகளை கேட்கிறார்.

 

 
 
கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தினறியவாரு மேடம் சசிகலா சப்போர்ட்டிங் என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார். ஆனால் அவரை விடாத அந்த நிருபர் அவரை தொடர்ந்து சென்றவாறு மேலும் சில கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்கிறார்.
 
ஆனால் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என வேகமாக சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :