வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 14 மார்ச் 2016 (10:08 IST)

தொழிலாளியை கடித்து அவரது தலையை கவ்விச் சென்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் புலி தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்த, அந்த புலியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


 

 
சில தினங்களுக்கு முன்னர் நீலகிரி பந்தலூர் உட்பிரையர் எஸ்டேட் பகுதியில் தொழிலாளி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு புலி அந்த தொழிலாளியை தாக்கியது. அத்துடன அவரது தலையை கடித்து குதறி, தலையை கவ்விச் சென்றது.
 
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், புலி தாக்கி உயிரிழந்த தொழிலாளி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
 
இந்நிலையில், புலியின் நடமாட்டம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளர்.
 
அந்தப் புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த புலி விரையில் பிடிபடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.