வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 7 டிசம்பர் 2016 (09:01 IST)

ஜெ.வின் ஆலோசகர் சோ ராமசாமி மரணம்!

ஜெ.வின் ஆலோசகர் சோ ராமசாமி மரணம்!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.


 
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும், அரசியல் ஆலோசகருமான மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி நடிகர், எழுத்தாளர், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் என பல பரினாமங்களை கொண்டவர்.
 
கடந்த சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் சோ ராமசாமி. இந்நிலையில் நேற்று ஜெயலலிதா இறந்ததை கேட்டதும், அழுதுகொண்டே இருந்த சோ அவரது முகத்தை பார்க்க முடியவில்லையே என்ற சோகத்தில் இருந்துள்ளார்.
 
நோய்வாய்பட்டு மருத்துவமனையில் இருந்த சோ ராமசாமியை ஜெயலலிதாவின் மரண செய்தியும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 4.05 மணியளவில் சோ ராமசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் பலர் சோ ராமசாமிக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.