Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவுக்கு அல்வா கொடுத்த எம்எல்ஏக்கள்: பிடியில் இருந்து தப்பி பன்னீர்செல்வத்திடம் தஞ்சம்!

சசிகலாவுக்கு அல்வா கொடுத்த எம்எல்ஏக்கள்: பிடியில் இருந்து தப்பி பன்னீர்செல்வத்திடம் தஞ்சம்!

வியாழன், 9 பிப்ரவரி 2017 (10:21 IST)

Widgets Magazine

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைக்க தமிழக அரசியல் களம் புரண்டு படுக்க ஆரம்பித்துள்ளது. சசிகலா தனது எம்எல்ஏக்களின் பலத்தை நிரூபித்து முதல்வராக துடித்துக்கொண்டிருக்கிறார்.


 
 
ஆனால் தனது பலம் என்ன என்று சட்டசபையில் தெரியும் என புன்னகைக்கிறார் ஓபிஎஸ். இப்படி பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறது தமிழக அரசியல். தனது பலத்தை நிரூபிக்க எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டிய சசிகலா அவர்களை தற்போது தனியார் சொகுசு விடுதியில் சிறைவைத்துள்ளார்.
 
ஆனால் அவரது பிடியில் இருந்து தப்பித்து சசிகலாவுக்கு அல்வா கொடுத்துவிட்டு மூன்று எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வத்திடம் தஞ்சம் புகுந்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்ததும் அனைவரும் சொகுசு பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர். தாங்கள் கடத்தப்படுகிறோம் என்பதை உணர்ந்த வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன் ஆகிய இருவரும் வீட்டிற்கு சென்று துணி எடுத்து வருவதாக கூறி தப்பித்து பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக வந்துள்ளனர்.
 
மற்றொரு எம்எல்ஏவான ஊத்தாங்கரை தொகுதி எம்எல்ஏ மனோரஞ்சிதம் சசிகலா ஏற்பாடு செய்திருந்த எம்எல்ஏ கூட்டத்திற்கு செல்லாமல் அவருக்கு டிமிக்கி கொடுத்து சென்னையை காரிலேயே சுற்றி பன்னீர்செல்வத்திடம் வந்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மன உளைச்சல் காரணமாக நடிகை தூக்கு மாட்டி தற்கொலை!

வங்க மொழிப்படங்களில் நடித்து வரும் திரைப்பட நடிகை பிடாஸ்டா சஹா மன உளைச்சலால் தற்கொலை ...

news

சேம் சைடு கோல் போடும் சுப்பிரமணியன் சுவாமி: அதிமுகவின் பின்னணியில் பாஜக தான் உள்ளது!

ஆளும் அதிமுகவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஆட்சி கலையும் சூழல் ...

news

எம்எல்ஏக்கள் மீது நம்பிக்கை இழந்த சசிகலா: சிறைவைப்புக்கு காரணம் என்ன?

அதிமுக எம்எல்ஏக்களை சுதந்திரமாக நடமாடவிடாமல் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மகாபலிபுரம் ...

news

கண்ணீர் விட்டு அழுத சசிகலா

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கண்னீர்

Widgets Magazine Widgets Magazine