Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினகரனால் உயிருக்கு ஆபத்து: துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கேட்கும் மதுசூதனன்!

தினகரனால் உயிருக்கு ஆபத்து: துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கேட்கும் மதுசூதனன்!

Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2017 (16:00 IST)

Widgets Magazine

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட உள்ள மதுசூதனனுக்கு தினகரன் தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வருவதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


 
 
ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அவரது ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவின் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
 
இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் போட்டியிட உள்ள மதுசூதனனுக்கு கடந்த சில தினங்களாக போனில் கொலை மிரட்டல் வருவதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
அதில் துணைப்பொதுச்செயலாளர் தினகரனின் பெயரை சொல்லி பல்வேறு மர்ம நபர்கள் போனில் மிரட்டல் விடுகின்றனர். தேர்தலில் போட்டியிடுவதை வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என கூறப்பட்டுள்ளது.
 
எனவே தினகரன் தரப்பினரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தனக்கு அளிக்க வேண்டும் என மதுசூதனன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பின் வாங்க உள்ள தினகரன்?: இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனால் இது தான் முடிவு!

தேர்தல் ஆணையத்தின் நாளைய முடிவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்கப்படும் தெரியவரும்.

news

இரட்டை இலை சின்னத்தை முடக்க மத்திய அரசு திட்டம்: அதிமுக எம்.பி.க்கள் கொந்தளிப்பு

ஆர்.கே.இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பினர் இடையே ...

news

சிஆர் சரஸ்வதி ஒரு அரசியல் ‘வியாதி’: நிர்மலா பெரியசாமி ஆவேசம்!

அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி இன்று மாலை சசிகலா அணியில் இருந்து ஓபிஎஸ் ...

news

கருத்து வேறுபாட்டால் முட்டிக்கிட்டு நிற்கும் தினகரன், எடப்பாடி பழனிச்சாமி?: அடுத்த பஞ்சாயத்த எப்ப கூட்டுவாங்களோ!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி ...

Widgets Magazine Widgets Magazine