1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 26 மே 2016 (14:37 IST)

விற்பனை இல்லாத 500 மதுக்கடைகளைத்தான் மூடுகிறார்களா? : புதிய தகவல்

சரியான விற்பனை இல்லாத 500 சில்லரை மதுபானக் கடைகளைத்தான் தமிழக அரசு மூட முடிவெடுத்துள்ளது என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சட்டமன்ற தேர்தலின் போது, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், பூரண மதுவிலக்கு என்ற கொள்கையை கடைபிடித்தனர். ஆனால், அதிமுகவோ படிப்படியாக மதுவிலக்கு என்று கூறியது. மக்கள் அதிமுகவைத்தான் தேர்ந்தெடுத்தார்கள்.
 
கூறியதுபோலவே, தமிழக முதல்வர் ஜெயலலிதா 500 சில்லரை மதுபானக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த தொல். திருமாவளவன் “500 கடைகளை மூடுவதாக ஜெயலலிதா கூறியுள்ளதை வரவேற்கிறோம். ஆனால், அந்த கடைகளை அனைத்தும் சரியான வியாபாரம் இல்லாத மந்தமான கடைகள் என்று கூறப்படுகிறது.
 
அதேபோல், 12 மணிக்கு மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால், மாலை 5 மணிக்கு மேல் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். 
 
முழுமையன மதுவிலக்குக்கு 5 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளாமல், 2 ஆண்டுகளிலேயே பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் உறுதியளிக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.