வருங்காலத்தில் வெயில் வாட்டியெடுக்கும்: ரமணன் எச்சரிக்கை


Abimukatheesh| Last Modified ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (19:13 IST)
வர்தா புயல் பாதிப்பால் சென்னையில், வரும் காலங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். 

 

 
சேலம் மாவட்டத்தில் நடைப்பெற்ற விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ரமணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
வர்தா புயலால் ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டதால், வரும் காலங்களில் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படக் கூடும். இதனால் வெயில் அதிக அளவில் இருக்கும். அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதிக அளவில் மரங்களை நட முன்வர வேண்டும், என்றார்.
 
இந்த ஆண்டிற்கான பருவமழை பெய்யாத காரணத்தால் தமிழகத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் வர்தா புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மரங்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளது. 
 
சாதரணமாகவே சென்னை பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்படுவது வழக்கம்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :