வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (14:21 IST)

இதைய எதிர்பார்க்கலீல...’விஜயகாந்த் வீட்டை சுற்றும் அரசியல் தலைகள்’

திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்  கோலோச்சிக் கொண்டிருந்த விஜயகாந்த் கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிக என்ற தனிக்கட்சியை தொடங்கினார். அதற்கடுத்த ஆண்டு நடைபெற்ற சட்ட சபைத்தேர்தலில் தனித்து போட்டியிட்ட விஜயகாந்த். விருதாசலத்தில் போட்டி இட்டார். ஆனால் அவர் மட்டுமே சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டர்.

அடுத்து சில ஆண்டுகளில் கலைஞர் தலைமையிலான அரசு விஜயகாந்த்-ன் கோயம்பேட்டிலுள்ள மண்டபத்தை இடித்தது.
 
இதனையடுத்து திமுகவிற்கும் தேமுதிகவிற்கும் பகை என்பது போல் பார்க்கப்பட்டது. அடுத்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக   தேர்தலை சந்தித்தது.
 
இதில் பெருவாரியான இடங்களை பெற்ற ஆட்சியை பிடித்தது அதிமுக. முதலைமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றதுடன்,. விஜயகாந்தை எதிர்கட்சி தலைவராக பதிவியேற்க செய்தார். குறுகிய காலத்திலேயே சட்டமன்ற  எதிர்கட்சித் தலைவராக உயர்ந்தார் என்று விஜயகாந்தை புகழாதவர்கள் இல்லை.
 
இந்நிலையில் பின்னர் கடந்த 2015 ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை வகித்த தேமுதிக பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதிலிருந்து தேமுதிகவுக்கு இறங்கு முகம் தான்.
 
அண்மைக்காலமாக விஜயகாந்துக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே அவரது மனைவி பிரேமலதா  விஜயகாந்த்  கட்சியை வழிநடத்தினார்.
 
உடல்நிலை சரியாக அமெரிக்காவிலிருந்து   சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்தை சுற்றியே தற்போதைய தமிழக அரசியல் காய்கள் நகர்கிறது. இதை நன்கு புரிந்து கொண்ட தேமுதிக தன் கெத்தை விட்டுக்கொடுக்காமல் இந்த மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி  பேரம் பேசிவருகிறது.
 
சில நாட்களுக்கு  முன்னர் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பாஜகவின்  பியூஸ் கோயல், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சற்று நேரத்துக்கு முன்னர் ரஜினி, ஆகியோர் விஜயகாந்தை சந்தித்த நிலையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலினும் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இது அரசியலில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஸ்டாலின் கூறியதாவது ,
 
விஜயாகாந்த் தலைவர் கருணாநிதியின் மீது நல்ல மரியாதை வைத்திருந்தார். மேலும்  உடல்நிலை சரியில்லாமல், அமெரிக்காவில் இருந்து  சிகிச்சை பெற்று வந்துள்ள  விஜயகாந்தை பார்ப்பதற்காக வந்துள்ளேன். மனிதநேயத்தின் அடிப்படையிலான சந்திப்பு இது என்றார். அரசியல் பற்றியோ கூட்டணி குறித்து பேசவில்லை என்று பகிரங்கமாக தெரிவித்தார்.
 
இனி எல்லாம் விஜயகாந்த் கையில் தான் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.