Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தலித் என்பதால் திருவள்ளுவர் சிலை நிறுவ அனுமதிக்கப்படவில்லையா? - வைரமுத்து கோபம்

Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2016 (02:44 IST)

Widgets Magazine

தலித் என்பதால் திருவள்ளுவர் சிலை நிறுவ அனுமதிக்கப்படவில்லையா? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
உத்திரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். கடந்த 29-ந் தேதி ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட விழாவில் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
ஆனால், சாதுக்களின் கடும் எதிர்ப்பால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது. ஆனால், தற்போது அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில், கேட்பாரற்று கிடக்கிறது.
 
திருவள்ளுவர் சிலைக்கு நேர்ந்த அவலம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கவிஞர் வைரமுத்து, ’’திருவள்ளுவர் தலித் என்பதால் சிலை நிறுவ அனுமதிக்கப்பட வில்லையா? அவர் தமிழர்! தமிழின் ஞான அடையாளம்! ஒருவேளை அவர் தலித் என்பது உண்மையானால் தமிழருக்கு சிறுமையல்ல தமிழருக்கு அது பெருமைதான். 
 
திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது தமிழர் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சிலை அவமதிப்பு விவகாரத்தில் உத்தராகண்ட் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழறிஞர், தமிழ் அமைப்புகள் இணைந்து சிலையை மீட்டெடுக்கும்’’ என்று கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

’அவமதிக்கப்பட்டது சிலையல்ல, ஒரு சமூகத்தின் மானம்’ - திருவள்ளுவர் சிலை குறித்து ருத்ரன்

திருவள்ளுவர் சிலை கேட்பாரற்று கிடப்பது குறித்து, அவமதிக்கப்பட்டது சிலையல்ல, ஒரு ...

news

சுவாதி கொலையில் திருமாவளவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது - எச்.ராஜா அடுத்த குண்டு

சுவாதி எதற்காக மதம் மாற நினைத்தார்? அவரை மதம் மாற சொன்ன பையன் யார்? இவையெல்லாம் ...

news

சினிமாவை மிஞ்சும் பயங்கரம் - மணல் கடத்திய லாரியை விரட்டி சென்ற எஸ்.ஐ. சிறை பிடிப்பு

வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி நள்ளிரவு சென்னை-பெங்களூரு தேசிய ...

news

’சுவாதி கொலை மதம் மாறி காதலித்ததால் நடந்தது’ - திருமாவளவன்

சுவாதி கொலைக்கு ஒருதலை காதல் காரணம் அல்ல. மதம் விட்டு மதம் மாறி காதலித்ததால் இந்த கொலை ...

Widgets Magazine Widgets Magazine