முரளிதரன் படத்துல யார் வேணாலும் நடிக்கட்டும்.. நீங்க நடிக்காதீங்க! – திருமா, வேல்முருகன் அறிவுறுத்தல்!

Prasanth Karthick| Last Modified வெள்ளி, 16 அக்டோபர் 2020 (17:04 IST)
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் ”800” திரைப்படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. ஈழப்படுகொலையின்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் எப்போது இனப்படுகொலைக்கு ஆதரவாக பேசியது இல்லை என முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனாலும் 800 படத்திற்கான எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் “முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தை யார் வேண்டுமானாலும் இயக்கட்டும், யார் வேண்டுமானாலும் நடிக்கட்டும். ஆனால் தமிழர்கள் மீது அக்கறை கொண்ட விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பது ஏற்புடையது அல்ல” என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ”தன் வாழ்க்கை படத்தை வெளியிடுவதற்காக முரளிதரன் தன்னை நியாயப்படுத்தி பேசிக் கொள்கிறார். தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது” என்று தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :