1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 ஜூன் 2019 (17:58 IST)

மூன்றாம் கலைஞர் உதயநிதி என்றால் தொண்டர்கள் நிலை ?

சமீபத்தில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா குரல் கொடுத்தார். இதற்கு அக்கட்சியில் முக்கிய பிரமுகர் கே.பி . முனிசாமி ஆதரவு குரல் கொடுத்தார். பின்னர் அதிமுவில் நடந்த கட்சி ஆலோசனைக்குழு கூட்டத்திற்குப் பின்  ’ராஜன் செல்லப்பா’பல்டி ’ அடித்தார்.
இந்நிலையில் அதிமுகவில் இணைந்த நடிகர் ராதாரவி உண்மையில் திமுகவில்தான் இரட்டை தலைமை உள்ளது. அந்த இன்னொரு தலைமை யார் என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் என பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 
 
இந்நிலையில் உண்மையாளுமே திமுகவில் இரட்டைத் தலைமைப் பிரச்சனை உள்ளதா?  என்றால் அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  காரணம் மக்களவை - இடைத்தேர்தலுக்கு முன்னர் பல கட்சித் தலைவர் , ஆளுங்கட்சி தலைவர்கள், பிரபல நடிகர்கள் சினிமா பிரபலங்கள் என எல்லோரும்  தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று கூறினர்.
 
அதற்கு நடைபெற்று முடிந்த, மக்களவைத் தேர்தலில் 38 ( புதுச்சேரி) தொகுதிகளில் திமுக கூட்டணி அசுரபலத்துடன் வெற்றி பெற்று, தமிழகத்தின் சார்பில் குரல்கொடுக்க 38  எம்பிக்களையும் பாராளுமன்றத்துக்கு அழைத்துக்கொண்டு போகவுள்ளது.
 
இந்நிலையில் கலைஞர் மறைவுக்குப் பின்னர், ஸ்டாலின் தலைவர் பதவியை நிரப்பிக் கொண்டார். தன் பழுத்த அரசியல்அனுபவத்தை ஊற்றி அதில் கட்சியை இக்கட்டான மாபெரும் எழுச்சியுடன் மீட்டுள்ளார்.
 
ஆனால் கலைஞருக்கு அடுத்த நிலையில் இரண்டாம் கலைஞராகக் கருதப்படும் ஸ்டாலிக்கு அடுத்த தலைவர் யார் என்று தொண்டர்கள் மனதில் கேள்வி எழுவதாக அரசியல் நோக்கர்கள் கூறினர்.இந்த நிலையில் தான் சினிமாவில் நடிகராக வலம்வரும் மூன்றாம் கலைஞராக சில தொண்டர்களால் கருதப்படும் உதயநிதி ஸ்டாலின் இதற்கு தன்னை தயார் படுத்திவருகிறார்.
 
இதில் பெரும்பான்மையானவர்கள் ஆதிகாலத்திலிருந்து திமுக கட்சியின் குடும்பம் குடும்பமாக உழைத்துவருகின்றனர்.ஆனால் அவர்களுக்கு உரிய முக்கியத்துவமும் பதவியும் கட்சியில்  கிடைத்ததா என்றால் அது அக்கட்சியின் வகிக்கும் தொண்டர்களுக்கே வெளிச்சம்.
 
ஆனால் இக்கட்சியில்(திமுக)  ஆரம்ப கட்டத்திலிருந்து, உழைத்து முன்னேறி வெற்றிக்கொடிநாட்டியவர்களும் உள்ளனர் என்றால் அது மிகையல்ல.