’கமல் நாக்கை அறுப்பேன்’ என்று கூறியதில் எந்த மிரட்டலும் கிடையாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

rajendra balaji
Last Updated: செவ்வாய், 14 மே 2019 (16:23 IST)
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து (நாத்தூராம் கோட்சே) என்று கமல் கூறியதை தொடர்ந்து  அவருக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில்  சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “ கமலின் நாக்கு ஒருநாள் அறுபடும்” என மிரட்டும் தோனியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இன்று இதுகுறித்து விளக்கமளித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  கூறியுள்ளதாவது :
 
“தமிழ்நாட்டில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அந்த ஒற்றுமையை குலைத்து வன்முறையை வளர்க்கும் விதத்தில் கமல் பேசி வருகிறார். 
 
இப்படியாக அவர் தொடர்ந்து பேசி வந்தால் மக்களே அவர் நாக்கை அறுத்துவிடுவார்கள் என்ற அர்த்தத்தில்தான் அவ்வாறு கூறினேன். இதில் எந்த விதமான மிரட்டலும் கிடையாது” என மறுப்பு தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :