1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2017 (11:50 IST)

தியேட்டர்கள் திறக்கப்பட்டது - கட்டணங்கள் எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்பட்டன. அதேபோல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டியோடு சேர்த்து டிக்கெட்டுகளுக்கு புதிய விலைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


 

 
ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி 28 சதவீதமாக இருக்கும் போது, தமிழக அரசு சார்பு கேளிக்கை வரியை 30 சதவீதமாக அதிகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன.  ஏறக்குறைய 1000 திரையரங்குகள் மூடிக்கிடந்ததாத தெரிகிறது. இதனால் சினிமா துறைக்கு தினமும் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. கேளிக்கை வரி குறித்து விவாதித்து முடிவு செய்ய பேச்சுவார்த்தை குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதில் திரைத்துறை சார்பில் சிலரும், அரசு சார்பில் சிலரும் பங்கேற்பார்கள் என அபிராமிநாதன் செய்தியாளர்ளிடம் கூறினார். மேலும், இன்று முதல் தியேட்டர்கள் வழக்கம்போல் திறக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதன்படி இன்று தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
 
புதிய கட்டண முறை:
 
தியேட்டரில் டிக்கெட் விலையோடு சேர்த்து ஜி.எஸ்.டி தொகையும் மக்களிடம் வசூலிக்கப்பட இருக்கிறது. அதாவது, சினிமா டிக்கெட் ரூ.100 க்கு குறைவாக இருந்தால் 18 சதவீத ஜி.எஸ்.டி. மற்றும் ரூ.100 க்கு மேல் இருந்தால் 28 சதவீத வரி வசூலிக்கப்படும். அதன் படி 
 
ரூ.120 + ஜி.எ.ஸ்டி -ரூ.153.60
 
ரூ.100 + ஜி.எஸ்.டி - ரூ.128
 
ரூ.90 + ஜி.எஸ்.டி- ரூ.106
 
ரூ.80 + ஜி.எஸ்டி - ரூ.94
 
ரூ.70 + ஜி.எஸ்.டி- ரூ.82
 
ரூ.50 + ஜி.எஸ்.டி- ரூ.59
 
ரூ.10 + ஜி.எஸ்.டி- ரூ.12

என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆன்லைனில் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்தால் இந்த விலையோடு, வழக்கம்போல் ரூ.30 அதிகமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.