1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel

தனியார் துறையிலும் 27 சதவீதம் இடஒதுக்கீடு தேவை: ஜி.கே.வாசன்

தனியார் துறையிலும் 27 சதவீதம் இடஒதுக்கீடு தேவை: ஜி.கே.வாசன்

தனியார் துறையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்று  ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பிலும் கல்வி நிறுவனங்களிலும் 27 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
 
தற்போது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தனியார் நடத்தும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பெரிய தொழிற்சாலைகள் போன்றவற்றிலும் இந்த இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது வரவேற்கதக்கது.
 
எனவே, இதனை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டு, நிறைவேற்ற தேவையான சட்டத் திருத்தத்தை கொண்டுவர வேண்டும்.மேலும், இதை கண்காணிக்க தனிக்குழுவை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.