K.N.Vadivel|
Last Updated:
செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (05:11 IST)
திமுக தலைவர் கருணாநிதியை அவதூறுதாக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதிமுக பொதுச் செயலாளர், திமுக தலைவர் கருணாநிதி மீது கடும் விமரசனத்தை முன்வைத்தார். உடனே தனது பேச்சுக்கு வருத்தமும் தெரிவித்துக் கொண்டார். ஆனால், திமுகவினர் தமிழகம் முழுக்க வைகோ கொடும்பாவியை எரித்து பேராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை இழிவுப்படுத்தும் வகையிலும், அவதூறாக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாக தேர்தல் அதிகாரி சங்கீதா புகார் அளித்தார். அதன் பேரில் எழும்பூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.