வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 27 ஜூன் 2016 (15:55 IST)

ஒரு கோடி அப்பவே கொடுத்தாச்சு : ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா அதிரடி

நதிநீர் இணைப்புக்காக கொடுப்பதாக சொன்ன ரூ. 1 கோடியை நடிகர் ரஜினிகாந்த், அப்போதே வங்கியில் வைப்பு நிதியாக செலுத்திவிட்டார் என்று ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா ராவ் கூறியுள்ளார்.


 

 
காவிரி நீர் பிரச்சனையின் போது, உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்துக்கு, கர்நாடகம் காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்து நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.
 
அந்த உண்ணாவிரதம் முடிந்து அவர் பேசுகையில், நதிகள் இணைப்புத் திட்டத்திற்காக தனது பாக்கெட்டிலிருந்து ரூ.1 கோடி தருவதாக அறிவித்தார். ஆனால் அது நடந்து 14 வருடங்கள் ஆகிறது. நதிகள் இணைப்புக்கு மத்திய அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அது சாத்தியமில்லை என்று 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூறிவிட்டது.
 
இந்நிலையில், சில நாட்களுக்கு, ரஜினி தருவதாக கூறிய ரூ.1. கோடியை உடனே அவர் தரவேண்டும் என்று கூறி, விவசாயிகள் சங்கம் என்ற பேரில் சிலர் மிரட்ட ஆரம்பித்தனர்.
 
ஆனால், அப்படி ஒரு விவசாய சங்கமே இல்லையென்றும், ரஜினியிடம் பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்திற்காகவும் சிலர் இந்த வேலையை செய்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், ரஜினியின் அண்ணன் சத்யநாரயன ராவ் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்போது “ரஜினி அமெரிக்காவில் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். கபாலி படம் வெளியாகும்போது அவர் சென்னை திரும்புவார். நதி நீர் இணைப்புக்காக ரஜினி தருவதாகச் சொன்ன அந்த ஒரு கோடியை அப்போதே தேசிய வங்கியில் டெபாசிட் செய்து விட்டார். 
 
மத்திய அரசு நதிகள் இணைப்புக்கான திட்டத்தை அறிவித்த உடனே அந்தத் தொகை முழுவதும் அப்படியே அந்த திட்டத்துக்கு போகுமாறு ஏற்பாடு செய்துள்ளார் ரஜினி" என்று கூறினார்.
 
எனவே ரூ.1.கோடி சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.