கணவன் - மனைவி பிரச்சனையில் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்...

cavai
Last Modified வெள்ளி, 7 டிசம்பர் 2018 (15:20 IST)
கோவை மாவட்டம் மசக்காளிபாளையம் பகுதியில் செல்வராணி - பத்மநாபன் தம்பதியினர் வசித்து  வந்தனர். பத்மநாபன் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். செல்வராணி வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு  ஹேமா வர்ஷினி ( 15) ஸ்ரீஜா (10) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் - மனைவிக்குள் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று  இரவு இருவருக்கும் வாக்குவாதம்  முற்றியுள்ளது. அப்போது பத்மநாபன் தன் மனைவியை அடித்துள்ளார். இதனால் செல்வராணி கோபித்துக்கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
 
குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் செல்வதாக செல்வராணி கூறியும் பத்மநாபன் அதற்கு  அனுமதிக்கவில்லை. குழந்தைகள் தன்னுடனேயே இருக்கட்டும் என கூறிவிட்டார்.
 
இதனையடுத்து மறுநாள் காலையில் செல்வராணி மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது  தன் குழந்தைகள் இறந்து கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் உடனடியாக இதுபற்றி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
 
போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்கையில் பத்மநாபன் தன் இரு மகள்களையும் கழுத்து நெறித்து கொன்றுள்ளதாக கூறினார்கள். மகள்கள் இருவரையும் கொன்று விட்டு பத்மநாபன் ஒடிப்போய் விட்டதால் அவரை பிடிக்க போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
இரு மகள்களை தந்தையே கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :