வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (23:44 IST)

தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ 10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக அரசு விரைந்து வழங்கவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்வும் மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 10,000 கோடியை உடனே வழங்க வேண்டும் என சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, சமத்துவ மக்கள் கட்சி தலைவரும்,  எம்.எல்.ஏ.வுமான ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 170 பேர் பலியாகியுள்ளனர்.
 
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக அரசு விரைந்து வழங்கவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்வும் மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 10,000 கோடியை உடனே வழங்க வேண்டும்.
 
வெள்ள நிவாரண பணிகளை அரசியல் பார்வையின்றி அனைத்து அரசியல் இயக்கங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.