Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி; குண்டை தூக்கிப் போட்ட ஜெயானந்த்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (17:00 IST)
சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய முயற்சிப்பது எம்.ஜி.ஆர் எழுதி வைத்த கட்சி சட்டத்திற்கு விரோதமானது என திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.

 

 
இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து திவாகரன் மகன் ஜெயானந்த் தனது ஃபேஸ்புக்கில் கூறியதாவது:-  
 
பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் மறைமுகமாக சசிகலாதான் அதிமுக பொதுச்செயலாளர் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அப்படி என்றால், சசிகலா பொதுச் செயலாளர் என்ற வகையில் பிறப்பித்த உத்தரவில் பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டே நீக்கிவிட்டார்.
 
எடப்பாடி பழனிச்சாமியையும் தலைமை கழக செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார். எனவே பொதுச்செயலாளரால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இணைந்து பொதுச்செயலாளரை நீக்க முடியாது. சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவது எம்.ஜி.ஆந் எழுதி வைத்த கட்சி சட்டத்திற்கு விரோதமானது.
 
இவ்வாறு ஃபேஸ்புக்கில் ஜெயானந்த் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :