வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (12:45 IST)

தெர்மாகோல் பறக்காம இருக்க செலோ டேப்: செல்லூர் ராஜூவை இப்படியா கலாய்ப்பது!

தினகரன் ஆதரவாளரான சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவை தெர்மாகோல் விவகாரத்தை வைத்து மீண்டும் கலாய்த்துள்ளார்.
 
அமைச்சர் செல்லூர் ராஜூ சில மாதங்களுக்கு முன்னர் வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் விட்டார். இந்த திட்டம் சொதப்ப அவர் கடுமையாக நகைச்சுவைக்கு ஆளாக்கப்பட்டார். பலரும் அவரை தெர்மாகோல் ராஜூ என கலாய்க்க ஆரம்பித்தனர்.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் செல்லூர் ராஜூ பாஜகவுக்கு எதிராக பேட்டி ஒன்றை அளித்தார். அது குறித்து தங்க தமிழ்ச்செல்வனிடம் தற்போது கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் இவர்கள் மாறி மாறி பேசுபவர்கள். அன்று பாஜகவை புகழ்ந்து பேசினார்கள், இன்று எதிர்த்து பேசுகிறார்கள். இவர்கள் பேசுவதை மக்கள் நம்பப்போவது இல்லை என்றார்.
 
மேலும் செல்லூர் ராஜூ வைகை அணையில் தெர்மாகோல் விட்டதை விடுங்க அது பறக்காம இருக்க செலோ டேப் ஒட்டினாரு பாருங்க என அவரை மீண்டும் கலாய்த்துள்ளார் தங்க தமிழ்ச்செல்வன்.